bsnleu

bsnleu

welcome

welcome

Thursday 29 June 2017

ஏர் இந்தியா’ பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

ஏர் இந்தியா’ பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்அதிக கடன் சுமையில் இருக்கும்ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதனைத் தெரிவித்தார்.இதற்காக நிதி அமைச்சர் தலைமையில் பிரத்யேக குழு அமைக்கப்படும். இந்த குழு பங்குகளை விற்பதற்கான காலத்தையும் வழிமுறைகளையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இம்மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வெளியாகின. ரூ.52,000 கோடி அளவுக்கு ஏர் இந்தியாவின் கடன் இருக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் இந்த நிறுவனம் 14 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.
ஏர் இந்தியாநிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. உள்நாட்டில் 72 நகரங்களையும், 41 சர்வதேச நகரங்களையும் இணைக்கிறது. மும்பையில் 32 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது தவிர டெல்லி, ஹாங்காங், லண்டன், நைரோபி, ஜப்பான் மற்றும் மொரிஷியஸ் ஆகிய பகுதிகளிலும் சொத்துகள் உள்ளன.
ஜேட்லி கூறும்போது, “எவ்வளவு பங்குகளை விற்பது, ஏர் இந்தியாவின் சொத்துக்கள், கடன்கள், மற்றும் அதன் ஹோட்டல் கிளை ஆகியவை குறித்து முடிவெடுக்கவுள்ளோம்என்றார்.
மத்திய அரசு சார்பான நிபுணர் குழுவான நிதி ஆயோக் மற்றும் நிதியமைச்சகம் அரசு முழு பங்குகளையும் விற்க வேண்டும் என்ற முடிவை ஆதரிக்க வான்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மத்திய அரசு சிறிய அளவிலாவது பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் 1932-ல் ஜே.ஆர்.டி. டாடாவினால் டாடா ஏர்லைன்ஸ் என்று தொடங்கப்பட்டதாகும். இது 1946-ல் பொதுத்துறை நிறுவனமானது. பிறகு 1953-ல் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டது.
ஏர் இந்தியாவை தனியார்மயப்படுத்தும் யோசனையை 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன் வைத்தது. இந்தியன் ஏர்லைன்ஸிலிருந்து 51% பங்குகளையும் ஏர் இந்தியாவிலிருந்து 60% பங்குகளையும் விற்க அப்போது தேஜகூ அரசு பரிசீலித்தது. ஆனால் அமைச்சக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் அது கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Friday 23 June 2017

BSNL வழங்கும் புதிய சலுகைகள்...

No automatic alt text available.No automatic alt text available.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தமிழக அரசுதான் முடிவு செய்யுமாம் – மத்திய அரசு அந்தர் பல்டி...

Image may contain: sky and outdoorதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார். இன்று விசாரணையின்போது, மத்திய அரசு பதில் மனு தாக்கல்செய்தது. அதில், ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் செங்கிப்பட்டி, மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைசெய்தது. முக்கியமாக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய சாதகமான இடம் என்று தமிழக அரசு குறிப்பிட்டது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்தத் தகவலை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது...

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை அதானிக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு...

தொடர்ந்து லாபத்தில் இயங்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மத்திய பாஜக அரசின் தவறான போக்கை கைவிடவும், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் துறைமுக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை துறைமுகத்தில் நிலக்கரியை கையாளக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து எண்ணூரில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் துணைத் துறைமுகம் உருவாக்கப் பட்டது. கடலோரம் உள்ள நிலங் களையெல்லாம் இழந்ததால், காட்டுப்பள்ளி,அத்திப்பட்டு, வாயலூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
ரூ.4 ஆயிரத்து 800 கோடியில் 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எண்ணுர் காமராஜர் துறைமுகம் 2013-ல் மத்திய அரசின் மிகவும் லாபகரமான துறைமுகம் என்ற விருதை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள் ளது. மேலும் ஆண்டு தோறும் தமிழக மின்சார வாரியத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து 250 லட்சம் டன் நிலக்கரி கையாளப்படுகிறது.ஆண்டுக்கு 3 லட்சம் நிஸான், ஃபோர்டு `ஹூண்டாய் கார்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்யப்படுகிறது.இப்படி ஏற்றுமதி,இறக்குமதி போன்ற நடவடிக்கைகளால் 2015-ல் மட்டும் ரூ.353 கோடி லாபம் ஈட்டியுள்ளது.இது 2016-ல் ரூ.450-கோடி லாபம் எடுத்துள்ளனர்.இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் கையாளும் மொத்த சரக்குகளில் 19 விழுக்காடு வரை காமராஜர் துறைமுகத்தில் மட்டும் கையாளப்படுகிறது.இந்நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரமாண்டமான பொதுத்துறை நிறுவனத்தைத் தான் மோடி அரசு பெரும் முதலாளியான அதானிக்கு வழங்கத் துடிக்கிறது.
அப்படி வழங்கினால் ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும்,இறக்குமதி பொருட்களின் மீது விலைவாசி உயரும். குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு பறிபோகும் என்பதால் இந்த துறைமுகத்தை தனியாருக்கு விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருவள்யர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். இதில் காமராஜர் துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிக்குமார், காமராஜர் துறைமுக அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணசேகர்பொற் செல்வன்,சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜி.வினாயகமூர்த்தி ,நரேஷ்குமார், .ஜெயவேல் (வடசென்னை அனல் மின் நிலையம்),பரந்தாமன் (எல் அண்டு டீ),சதீஷ் (வல்லூர் அனல் மின் நிலையம்) உட்பட பலர் பேசினர்.இதில் ஒப்பந்த தொழிலாளர்கள், சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Thursday 22 June 2017

ஜூன்-22 & 23 லோக்கல் கவுன்சில் மீட்டிங் . . .


Image result for LOCAL JCM MEETING LOGOஅருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தின்  முதல் ப்ரி-லோக்கல் கவுன்சில் கூட்டம் 22-06-17 அன்றும், 23-06-17 அன்று லோக்கல்  கவுன்சில் கூட்டமும் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அதி முக்கியமான பிரச்சனைகளாக 20க்கும் மேற்பட்டவை ஏற்கனவே, நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து கணக்கில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நல்ல தீர்வுகளை எடுப்பதும், தீர்ப்பதும் அவசியம் என் கருதுகிறோம்.

திருச்சி பெல் நிரந்தர ஊழியர்கள் 3 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்...

Image result for BHEL TRICHY FASTBHEL ஏடிபி துறையில் மேன் பவர் காண்ட்ராக்ட் விடுவதை உடனடியாகரத்து செய்ய வேண்டும். நிரந்தரப் பணிகளில் காண்ட்ராக்ட் விடும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். உடனடியாக ஆர்டிசன் தொழிலாளர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பெல் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வாயிற் கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து பெல் தொழிற்சாலை வளாகத்தில் பெல் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி ஜூன் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3 ஆவது நாளாகப் புதனன்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொ.மு., சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, திராவிடத் தொழிலாளர் கழகம், டாக்டர் அம்பேத்கர் யூனியன், பிசிஇயு, பிஎன்எஸ்யு, பிபிடபுள்யுஇ, எல்எல்எப், எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. முன்னதாகக் கடந்த 2 நாட்களுக்கு முன் பெல் நிர்வாக இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி கூட்டுக்குழு சார்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்த கட்டப் போராட்டம் நடைபெறும் எனக் கூட்டுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

யோகா இல்லை.. பட்டினி . . .

Tuesday 20 June 2017

ஊதிய மாற்றம் கோரி-எழுச்சியுடன் மதுரையில் தர்ணா...

அருமைத்தோழர்களே !BSNL ஊழியர்கள்- அதிகாரிகளின் ஊதிய மாற்று பேச்சுவார்த்தையை துவக்கக் கோரி ஊழியர்கள் - அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 20-06-17 அன்று மதுரையில்  தர்ணா போராட்டம் நடைபெற்றது.1.1.2017 முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும், 1.1.2017 முதல் ஓவ்வூதிய மாற்றம் செய்திட வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், சம்பள விகிதத்தின் அடிப்படையில் பென்ஷனுக்கான ஊழியர் பங்கீட்டை பிடித்தம் செய்ய வேண்டும், BSNLவளாகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்பரேட் அலுவலக கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது
இந்திய நாடு முழுவதும் நடை பெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊதிய மாற்றம் கோரி-எழுச்சியுடன் மதுரையில் தர்ணா... தோழர்கள் விஜயகுமார், SNEA மாவட்டத்தலைவர் ,பிச்சைக்கண்ணு, BSNLEU,மாவட்டத்தலைவர்  ஆகியோர் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தை, BSNLEU மாநில  அமைப்புச் செயலர் தோழர்.K..பழனிக்குமார் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். 
 போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ்   AIBSNLOA  மாவட்டச்செயலர் தோழர்.முருகன் ஆகியோர் உரையாற்றினர். அதன்பின் தோழர், அழகர்சாமி ACS-SNEA, தோழர்கள், வைத்திலிங்க பூபதி, அழகு பாண்டியராஜா, சூரியன், சீனிவாசன், ரிச்சர்டு, ஜான் போர்ஜியா , பி. சந்திரசேகர், விஜயகுமார் ஆகியோரும் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியாக சந்திர சேகர் SNEA-ACS, நிறைவுரை நிகழ்த்தினார் . போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், என். செல்வம் நன்றி கூறினார். 40 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday 17 June 2017

BSNL பொதுத்துறையின் பணத்தை விரயம் . . .

அருமைத் தோழர்களே...!தோழியர்களே...!!வணக்கம்!!!.,  மத்தியில் ஆளும்பாஜக   (BJP) அரசு ஆட்சிக்கு   வந்து மூன்றாண்டு காலம்நிறைவடைந்து விட்டது.இந்நிலையில் மத்திய அரசுதன்னுடைய 3ஆண்டு  காலஆட்சியின் சாதனைகளைப் பற்றி"SABKA SAATH SABKA VIKAS SAMMELAN"  அனைவரும்   இணைந்து  அனைவரின்   வளர்ச்சிக்காகசெயல்படுவோம் என்ற முறையில்நாடு முழுவதும் கூட்டங்களைநடத்திட திட்டமிட்டுகூட்டங்களைநடத்திக் கொண்டு இருக்கிறது
கூட்டங்கள் நடத்துவது அவர்களின்உரிமை என்ற அடிப்படையில் நாம்தலையிட வேண்டிய அவசியம்இல்லைஆனால் அந்தக்கூட்டங்களை BSNL உள்ளிட்டபொதுத்துறை நிறுவனங்களின்செலவில் நடத்துவது என்ற மத்தியஅரசின் முடிவு எந்த வகையில்நியாயம்?
எந்தவிதத்திலும்..., நியாயம் இல்லாதஇம் முடிவை அப்படியே ஏற்று., BSNL கார்ப்பரேட் அலுவலகம் 24-05-2017 தேதியிட்ட CA/Mktg./33-1/2017 என்றஉத்திரவு எண் கொண்ட கடிதத்தைவெளியிட்டுள்ளது.
இந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்:
மத்திய அரசின் மூன்றாண்டு கால நிறைவை ஒட்டி நாடு முழுவதும் "SABKA SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்ற முறையில் 27-05-2017 முதல் 15-06-2017 வரை 583 இடங்களில் சாதனை விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த 583 இடங்களில் தமிழகத்தில் 5 இடங்கள் உள்ளிட்ட (கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி நகரம், திருச்சி ஊரகம் மற்றும் தேனி) 42 இடங்களில்., இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு BSNL-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இதர 541 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பொறுப்பை மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
42 இடங்களில் நடைபெறும் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்களுக்கு BSNL நிறுவனம் தான் செலவு செய்ய வேண்டும்
BSNL நிறுவனம் 42 இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்திட வேண்டும்மத்தியஆட்சியாளர்களின் பொதுத்துறை விரோத மற்றும் தனியார் ஆதரவு கொள்கைகளின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக BSNL நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைசந்தித்து வந்த நிலையில்., ஊழியர் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்படுத்திய பல திட்டப் பணிகளின் காரணமாக BSNL நிறுவனம் லாபத்தை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது
BSNL-ன் நிதி நிலைமையை காரணம் காட்டி ஊழியர்களின் 3-வது   ஊதிய மாற்றம்   உள்ளிட்ட   பல்வேறு  சலுகைகளை தர மறுக்கின்ற அரசாங்கம்இப்படிப்பட்ட செலவுகளைBSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மேல் சுமத்துவது என்பது அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்.
                                          BSNL பணத்தில் இது போன்ற அரசின் சாதனை விளக்க கூட்டம்  நடத்துவதை கண்டித்து ...
16-06-17 வெள்ளியன்று மாலை தேனி தொலைபேசியகத்தில் ஆர்ப்பாட்டம்,SNEA  தோழர் தமிழ் ராஜன் தலைமையில் நடைபெற்றது., தோழர்.வீமன் ,SNEA  தோழர்.. பி.சந்திரசேகர் ,BSNLEU  தோழர்.சீனிவாசன் , BSNLEU தோழர்.எம். ராமச்சந்திரன் CITU  மாவட்ட செயலர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். கூட்டத்தில் 11 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.