bsnleu

bsnleu

welcome

welcome

Friday 23 June 2017

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தமிழக அரசுதான் முடிவு செய்யுமாம் – மத்திய அரசு அந்தர் பல்டி...

Image may contain: sky and outdoorதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார். இன்று விசாரணையின்போது, மத்திய அரசு பதில் மனு தாக்கல்செய்தது. அதில், ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் செங்கிப்பட்டி, மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைசெய்தது. முக்கியமாக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய சாதகமான இடம் என்று தமிழக அரசு குறிப்பிட்டது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்தத் தகவலை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment