அருமைத் தோழர்களே ! . . .
3வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க DPE கடிதம் கொடுத்துவிட்டது. 3வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி 19.07.17 அன்று ஏற்றுக்கொண்ட அமைச்சரவை முடிவை ஒட்டி இக்கடிதம் வெளியிடப்பட்டது. இந்தக்கடிதத்தின்படி BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அமைச்சரும் அரசாங்கமும், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் தருவதற்கு சாதகமாக உள்ளனர் என சங்கங்களும், BSNLலில் உள்ள உயர் மட்ட அதிகாரிகளும் பரப்பிவந்த வதந்திகளை இந்தக்கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் விரைவில் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள்.
பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம்
01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது.
இதற்கான ஒப்புதலை
DPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது.
குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும்.
அதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும்.
நமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை. . .
No comments:
Post a Comment