அருமைத் தோழர்களே ! பழனியில் நமது
BSNLEU சார்பில் கடந்த
04/08/2017 அன்று நடைபெற்ற அவசரபொதுக்குழுவில் எடுக்கப்பட்ட போராட்டத்திட்டம். தோழர் பழனிக்குமார் மாநில அமைப்பு செயலர் மற்றும் தோழர் அன்பழகன் கிளைச்செயலர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த சமூகவிரோதிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலமட்ட அதிகாரிகளின் பாரபட்சப்போக்கை கண்டித்தும் வகுக்கப்பட்ட போராட்டத்திட்டப்படி 09/08/2017 அன்று மாலை
5.30 மணியளவில் தொலைபேசி நிலையம் முன்பாக பழனி வட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆதரவோடு மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலசங்க , மாவட்டச்சங்க நிர்வாகிகளும், மற்றும் பல கிளைசெயலர்களும், பழனிவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தோழர்களும், மற்றும்
BSNLEU முன்னணி ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்....
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பழனி கிளைத் தலைவர் தோழர். சாது சிலுவைமணி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர். அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். பழனிக்குமார் எழுச்சி மிகு கோஷம் எழுப்பியதோடு போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார். அதன் பின், CITU, BEFI, AIIEA, மற்றும் பழனி நகர தொழிற் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
அதற்கடுத்து BSNLEU சார்பாக மாவட்டத்தலைவர் பிச்சைக்கண்ணு, முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்டச் செயலர் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கிளைப்பொருளர் தோழர். செந்தில்கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். BSNL நிர்வாகம் அத்து மீறியவர்கள் மீது மேலும் தாமதிக்காமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ... எதிர் வரும் 23-08-17 அன்று அடுத்த கட்ட போராட்டம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment