மதுரை லோக்கல் கவுன்சில் கூட்டம் வருகிற 21.8.2018 அன்று நடக்க இருக்கிறது .அதற்கான் PRE COUNCIL MEETING 20.8.2018 அன்று BSNLEU சங்க அலுவலத்தில் காலை 11மணிக்கு தோழர் சிவகுருநாதன் NFTE தலைமையில் நடைபெறும் .
bsnleu
welcome
Sunday, 19 August 2018
LOCAL COUNCIL MEETING ON 21.8.2018
மதுரை லோக்கல் கவுன்சில் கூட்டம் வருகிற 21.8.2018 அன்று நடக்க இருக்கிறது .அதற்கான் PRE COUNCIL MEETING 20.8.2018 அன்று BSNLEU சங்க அலுவலத்தில் காலை 11மணிக்கு தோழர் சிவகுருநாதன் NFTE தலைமையில் நடைபெறும் .
Tuesday, 1 May 2018
Tuesday, 10 April 2018
AUAB மதுரையில் ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு AUAB அறைகூவளுக்கிணங்க மதுரையில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் தோழர் ஜி.ராஜேந்திரன் NFTE தலைமையில் நடைபெற்றது ,தோழர்கள் C.செல்வின் சத்யராஜ் BSNLEU,சந்திரசேகர் SNEA,A.அருணாசலம் AIBSNLEA, கண்டன உரை நிகழ்த்தினார்கள் .தோழர் முத்துக்குமார் FNTO,தோழர் ராதாக்ருஷ்ணன் TEPU,தோழர் அழகுமலை சேவா BSNL ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
அகர்தலா மத்திய செயற்குழு முடிவுகள்
நமது சங்கத்தின் மத்திய செயற்குழு 03.04.2018 முதல் 05.04.2018 வரை அகர்தலாவில் சிறப்பாக நடைபெற்றது. ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆழமான விவாதங்கள் நடைபெற்றது.
ஊழியர் கோரிக்கைகளில் BSNL நிர்வாகத்தின் இன்றைய மெத்தன போக்கு, தேங்கியுள்ள ஊழியர் தரப்பு கோரிக்கைகள், BSNLல் செய்யப்படும் தேவையற்ற செலவினங்கள், ஊழியர் பற்றாக்குறை, Outsourcing, பொதுவான பிரச்சனைகள் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 03.05.2018 அன்று கோரிக்கை தினம் அனுஷ்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்று நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.
"கோரிக்கை தின" கோரிக்கைகள்:
01. BSNL பணிகளை அவசர கதியில் Outsourcing முறையில், தனியாருக்கு தாரைவார்க்காதே!
02. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்து!
03. மருத்துவ சலுகைகளை பறிக்காதே!
04. ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாதே!
05. Sr.TOA கேடரில் புதிய பணி நியமனம் செய்!
மத்திய செயற்குழு முடிவுகளை கறாராக அமுல்படுத்துவோம்....
ஊழியர் நல கோரிக்கைகளை வென்றெடுப்போம்!
தோழமையுடன்,
C.செல்வின் சத்யராஜ்
மாவட்டசெயலர்
Thursday, 8 March 2018
மார்ச் 8 மகளிர் தினம்

BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது
தோழமையுள்ள
C.செலவின் சத்யராஜ்
மாவட்டசெயலர்
மார்ச் 8 உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள்
தோன்றின. 1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின்
முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது
Thursday, 1 February 2018
திண்டுக்கலில் 3ம் நாள் சத்யாக்கிரக போராட்டம் l




திண்டுக்கலில் 3 ம் நாள் சத்யாகிரக போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .
அதில் தோழர் ஜி.ராஜேந்திரன் NFTE.தலைமை தாங்கினார்,கன்வீனர் , தோழர் செல்வின் சத்யராஜ் BSNLEU.தோழர் கே. பழனிக்குமார் BSNLEU மாநில அமைப்பு செயலாளர்
தோழர் விஐயரங்கன் NFTE,தோழர் மதனமுனியப்பன் TEPU கோரிக்கையை
விளக்கி பேசினார்கள்.இறுதியாக தோழர் KSஆரோக்கியம் B/S DDG Urban
நன்றி கூறினார்
Subscribe to:
Posts (Atom)


