bsnleu

bsnleu

welcome

welcome

Friday 21 June 2019

மத்திய சங்க செய்திகள்


Image result for bsnleu chq

BSNLன் புதிய மனிதவள இயக்குனராக திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை PSEB பரிந்துரை

பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு ஆணையமான PSEB திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை BSNLன் DIRECTOR (HR)ஆக பரிந்துரைத்துள்ளது. இதற்கான தேர்வு 14.06.2019 அன்று நடைபெற்றது. தற்போது பூனே மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளராக அவர் பணியாற்றி வருகின்றார். 
======================================================================

19.06.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற உள்ளது.

19.06.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 3வது ஊதிய மாற்றத்திற்காகவும், நமது BSNLன் புத்தாக்கம் தொடர்புடைய இதர கோரிக்கைகளுக்காகவும், நாம் கடைபிடிக்க வேண்டிய தந்திரோபயங்களை விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது. தற்போது நமது நிறுவனம் சந்தித்துக் கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக தனி கவனத்துடன் இந்தக் கூட்டம் விவாதித்து நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும். 

======================================================================

BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு ஜூலை 29 முதல் 31வரை பூனே நகரில் நடைபெறும்.

12.06.2019 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில் நமது விரிவடைந்த மத்திய செயற்குழுவை பூனே நகரில் ஜூலை 29 முதல் 31 வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநில செயலாளர்கள், மத்திய சங்க நிர்வாகிகளுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற வேண்டும். 

======================================================================

ஒப்பந்த ஊழியர்களை குறைக்காதே!  ஊதியத்தை உடனே வழங்கு!! 
12.06.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்களும், DIRECTOR(FINANCE) திரு S.K.குப்தா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர். 
1) ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க மாநிலங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவு
2) மாதக்கணக்கில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு தரவேண்டிய ஊதிய பாக்கிக்கான நிதியை விரைவில் ஒதுக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது பராமரிப்பு பணிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த DIRECTOR(FINANCE) BSNLன் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் நிதி இருப்பை பொறுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தினாலேயே ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வேறு வழியின்றி ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இருந்த போதிலும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நமது தலைவர்கள் DIRECTOR (FINANCE) அவர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

தோழமையுடன்,
c.செல்வின் சத்தியராஜ் 
மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment