bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 17 June 2017

ஜூன் -17, வீர பெண்மணி ஜான்சி ராணி நினைவு நாள்...

வரலாற்றில் இன்று - வீரப்பெண்மணி எனப் போற்றப்படும் ஜான்சி ராணிலட்சுமி பாய்மறைந்தார். 1858-ம் ஆண்டுஇதே நாள்ஆங்கிலேயப் படைகளுடன் போரிட்ட ஜான்சி ராணிபோர்க் களத்திலேயே உயிரை நீத்துவரலாற்றில்இடம் பெற்றார்.



ஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .

 இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானதுதமிழகத்தில்சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் வரிசையில்கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான'வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.
நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம்   ஆண்டு   ரகுபதி ஐயர்-   ருக்மணி   தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்சங்கரன்என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.
வாஞ்சிநாதன் மிகவும் மதித்துப் போற்றிய .சிதம்பரனார் மற்றும்., சுப்ரமணிய சிவா ஆகியோரைநெல்லை கலெக்டர் ராபர்ட்வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.
இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டதுஇதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார்அவரைகொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச்  புறப்படத் தயாராக இருந்தார்.
யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்துதிட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர்எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிடதானே தன்உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சிநொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால்தன்னைத்தானே சுட்டுவீர மரணம் எய்தினார்.நினைவை போற்றுவோம்.

Thursday, 15 June 2017

மே-17 சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்...

BSNL-தொலைபேசி  நிலையங்களையும், அலுவலகங்களையும் அன்றாடம் சுத்தம் செய்யம், அத்தியாவசிய பணிகளை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியை செய்யக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள், மாதக்கணக்கில் செய்த வேலைக்கு கூலி கிடைக்காமல் குறிப்பாக மே-17 சம்பளம் இது தேதி வரை வழங்காமல் ஒப்பந்தக்காரர் உறங்குவதும், இதை முறைப்படுத்த வேண்டிய நிர்வாகமோ வேடிக்கை பார்ப்பதும் என்ன நியாயம். . .
மாதாமாதம் 7-ந் தேதிக்குள் ஒவ்ஒவொரு ஒப்பந்த ஊழியரின் வாங்கிக் கணக்கில் சம்பளத்தை வழங்க வேண்டுமென கார்பரேட் அலுவலக உத்தரவு, மாநில நிர்வாக உத்தரவு எல்லாம் இருக்கின்றது. ஆனால் அதை அமல் படுத்த மறுக்கும் ஒப்பந்தக்காரரை ஒழுங்கு படுத்த வேண்டிய நிர்வாகம்  கன்டுகொள்ளாமல் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கின்ற்து. ஒப்பந்தகாரர்  தனது பில் பட்டுவாடா செய்யப்படவில்லை என்ற காரணத்தை சொல்லி தப்பிக்க முயற்சசிக்கின்றார். நிவர்த்தி செய்ய வேண்டிய நிர்வாகமோ மோடி அரசின் 3 ஆண்டு  சாதனை விளக்க கூட்டத்திற்கு பல லட்சம் செலவு செய்வதற்கான முஸ்தீப்பு பணிகளில் மிக தீவீரமாக இருக்கின்றது.
நிர்வாகம் உடனடியாக, மேலும் தாமதிக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தை ஏற்பாடு செய்யாவிட்டால் .... ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் தங்களது துப்பரவு பணியை நிறுத்தினால் எல்லாம் நாறிவிடும் என்பதை நாகரிகமாக எச்சரிக்கின்றோம். அலசசியப்படுத்தினால் அதிகாரவர்க்கம் அசிங்கப்பட்டுவிடும். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எங்களை தள்ள வேண்டாம்...
14-06-17 மதியம் 1 மணிக்கு மதுரை,

தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.வி. சுப்புராயலு தலைமை தாங்கினார். தோழர்கள்,எஸ். சோணைமுத்து, எஸ். சூரியன், சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் கண்டான் உரை நிகழ்த்தினார்கள். தோழர்.பி. தேசிங் நன்றியுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்ட போராட்டத்தில் 40 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Wednesday, 14 June 2017

ஜூன் 14: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்

                                                         வழிகாட்டியை இருந்திடுங்கள்... 
உடலில் புகுந்து,
உயிராய் கலந்து,
நமக்கே தெரியாமல்
எங்கோ எவரோ
உயிர் பிழைக்க
உதவும்
இந்த இரத்தம்!!

ஓடும்
இந்த இரத்தம்
புதிதாய் ஊற்றெடுக்கடும்,

பல உடம்பு
மாறி ஓடட்டும்
வரம்புகள் இன்றி.....
பெருமை
கொள்ளுங்கள்....
உங்கள் இரத்தம்
ஒரு உயிரை காத்தது என்று...

கர்வமாய் சொல்லுங்கள்,
உங்களை போன்ற
வள்ளல்கள்
ஆயிரம் பேரை
உருவாக்கினேன் என்று...

இரத்த தானம் செய்யுங்கள்,
பிறர் செய்ய
வழிகாட்டியை இருந்திடுங்கள்...


கார்ட்டூன் . . . கார்னர் . . .

june -14, சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....

இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் 1918ல் மெட்ராஸ் லேபர் யூனியன் எனும் மகத்தான சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....

மே-2017-க்கான சம்பளம் வழங்காததை கண்டித்து இயக்கம்...