bsnleu

bsnleu

welcome

welcome

Friday, 26 May 2017

நமது BSNLலில் TT இலாக்காத் தேர்வு- மறு அறிவிப்பு...!

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில் TT (Telecom Technician) இலாக்காத்தேர்வு நடத்துவதற்கு...,மறு அறிவிப்பு... செய்யப்பட்டுள்ளதுஏற்கனவே..., 09-07-2017 அன்று
TT இலாக்காத்தேர்வு நடைபெறும்., என்ற..., அறிவிப்பு... தற்போது... ரத்து... செய்யப்பட்டுள்ளது. 
    Image result for exam images
  • தற்போதைய... இந்த அறிவிப்பின் படி :
  • SSLC தேர்ச்சி பெற்ற ATT ஊழியர்கள் TT பதவி உயர்விற்கான தேர்வு எழுதலாம்.
  • தேர்வு நடைபெறும் நாள் : 20-08-2017.
  • விண்ணப்பிப்பதற்கான துவக்க நாள் : 15-06-2017.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-07-2017.
  • தேர்வு அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் நடைபெறும்.
  • தேர்வு நேரம் : 10.00 மணி முதல் 12.30 மணி வரை.
  • பகுதி - I : பொது அறிவியல் மற்றும் கணிதம் : 50 மதிப்பெண்கள்.
  • பகுதி - II : இலாக்காப் பயிற்சி : 50 மதிப்பெண்கள். 

நமது BSNLEU சங்கத்தின்...! கோரிக்கையை...! 
ஏற்று...! தேர்வுக் கட்டணம்...! ரத்து...! செய்யப்பட்டுள்ளது...!
தேர்வு கட்டணத்தை...! ரத்து செய்திட்ட...!  
நமது BSNLEU மத்திய., மாநில...!சங்கத்திற்கு...! நமது...! நன்றி...! பாராட்டுக்கள்......!

ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!



Thursday, 25 May 2017

26-05-17 BSNLEU மதுரை மாவட்ட செயற்குழு SPL.C.L..

அருமைத் தோழர்களே ! 26-05-17 அன்று நடைபெறவிருக்கிற நமது  BSNLEU மதுரை மாவட்ட செயற்குழு  கூட்டத்தில் பங்கு பெரும் செயற்குழு உறுப்பினர்களுக்கான மதுரை BSNL மாவட்ட நிர்வாகத்தின்  SPL.C.L.. கடிதம்...தோழர்கள் பயன் படுத்திக்கொள்வோம்....

வதிலை BSNLEU கிளையில் பனி நிறைவு பாராட்டு விழா ...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU வதிலை கிளையில், இம் மே மாதம் இலாகா பனி நிறைவு பெரும் தோழர்கள் கே. மகாராஜன் மற்றும் கே. பழனியாண்டி ஆகியோரின்  பனி நிறைவு பாராட்டு விழா 24.05.17  அன்று மிகவும் சீரும், சிறப்புமாக விமர்சியாக நடைபெற்றது. வதிலை  கிளை செயலர் தோழர்.கே. சின்னையன் வந்திருந்த அனை வரையும் வரவேற்று பேசினார். 
பனி நிறைவு செய்யும் தோழர்களை பாராட்டியும், நமது நிறுவனம் குறித்த இன்றயை நிலைகுறித்தும், நமது சங்கம் எடுத்துவரும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். அதன்பின் தோழர்கள் எஸ். சூரியன், எஸ். ஜான் போர்ஜியா, மற்றும் மாவட்ட தலைவர் தோழர்.எ. பிச்சை கண்ணு, அப்துல் ரசாக்,   ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக  பொன்னம்மாள் நன்றியுரையுடன் பணிநிறைவு விழா இனிதே நிறைவுற்றது.

Tuesday, 23 May 2017

மே-23, உடுமலை நாராயணகவி நினைவு நாள் (1981 மே 23)...


மே-23, தோழர்.எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள்...

சிறையில் கூடுகட்டிய குயில்-தோழர். M.R.V. நினைவு நாள்.
சரித்திரம்சிலரை எழுதுகிறது
சரித்திரத்தைசிலர் எழுதுகிறார்கள்
எம்.ஆர்.வி.!நீங்கள்இரண்டாம் ஜாதி
உன் முன்னோர்களின் வாழ்க்கை
கிளையைப் போல்மேலே உயர்ந்திருக்க
நீயோ -விழுதைப் போல்கீழே இறங்கி வந்தாய்.
நட்சத்திரங்களை ஸ்பரிசிக்க வேண்டிய
உன் விரல்கள்புழுதி மண்ணையே அளைந்தன.
கட்சியின் நிர்மாணத்தில்
நீஆழமாய் அமைந்தஅஸ்திவாரம் அல்லவா?
சுதந்திரத்திற்காக -
சிறையில்கூடு கட்டிக் கொண்டகுயில் நீ
கடைசிவரைக்கும்நீ சுவாசித்ததுகட்சிக்காகத்தான்
உனதுவக்கீல் தொழிலை
ஏன்கழற்றி எறிந்தாய்?
இனிமேல் அணிய வேண்டியது
கறுப்புக் கோட்டல்ல
சிவப்புக் - கோட்டு என்றுசித்தரிக்கவா?
நீவாதாட வேண்டியதுபொய் வழக்கல்ல
வர்க்க வழக்குக்கென்றுவரித்துக் கொண்டாயா?
துப்பாக்கிகள் உன்னைக்குறிபார்த்த போதும்
இயக்கத்தைத்தான் நீசரிபார்த்தாய்
.உன் ஒவ்வொரு சுவடும்ஒரு புதிய பாதை!
உன் ஒவ்வொரு சொல்லும்
ஒரு புதிய கீதை!நீ சொன்னதில்லை!
ஆனால் - உன்பூத உடம்பைக்குளிப்பாட்டும் போது
தானேஎத்தனை தழும்புகள் என்றுஎண்ணி முடித்தோம்!
உனக்கு சொர்க்கம் என்பதுவிண்ணில் இல்லை
அது -இன்னும் படைக்கப்படாமல்இங்கேதான் இருக்கிறது!
சோசலிச சொர்க்கம்படைப்போம்!
உன்ஞாபகதீபங்களின் வெளிச்சத்தில்...

வெல்லட்டும் ...மக்களுக்கான போராட்டம்...