bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday, 5 July 2017

இருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர் ! . . .

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதி, சற்று வித்தியாசமானது. கோவை மாவட்டத்தில் தமிழக எல்லைப் பகுதியான ஆனைக்கட்டியையொட்டி அமைந்திருக்கும் இங்கு, தமிழ் பேசும் ஆதிவாசி இன மக்கள் நிறைந்துள்ளனர். ஒருகாலத்தில் கள்ளச்சாராயமும் கள்ளும் மதுவும் ஆறாக ஓடியப் பகுதி. தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக பெண்கள் கிளர்ந்தெழுவதுபோல, அட்டப்பாடி பகுதியில் மதுவுக்கு எதிராக பெண்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த அளவுக்குக் குடித்துக் குடித்தே செத்த மக்கள் இங்கு ஏராளம். அதனால் அட்டப்பாடி பகுதியில் மட்டும் கேரள அரசு மதுவுக்குத் தடை விதித்தது
மருத்துவராகி சாதித்த இருளர் இனப் பெண்இங்குதான் புகழ்பெற்ற `சைலன்ட் வேலி' தேசிய பூங்கா அமைந்துள்ளது.பவானிஆறு, அட்டப்பாடி வழியாகத்தான் தமிழகத்துக்குள் நுழைகிறது. வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த இந்த பூமியில், சாமியும் ( யானை) காடும் மட்டும்தான்தெரியும்.காடுதான் வர்களின் வாழ்வாதாரம். அப்படிப்பட்ட பகுதியிலிருந்து அதுவும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராகிச் சாதித்துள்ளார்
அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி மக்களில் பல பிரிவினர் வசித்துவருகின்றனர். கேரளத்தில் 1995-ம் ஆண்டு கமலாக் ஷி என்கிற ஆதிவாசி பெண் முதன்முறையாக டாக்டர் ஆனார். அட்டப்பாடியைச் சேர்ந்த `முதுகா' என்கிற பிரிவைச் சேர்ந்தவர் அவர். அவருக்குப் பிறகு 22 ஆண்டுகளாக அட்டப்பாடியால் இன்னொரு பெண் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிப்பார்க்க முடியவில்லை. அட்டப்பாடியில் அதிகமாக வசிக்கும் இருளர் மக்களில் எவரும் டாக்டர் ஆனதில்லை. அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் துளசி. அதுவும் 12-ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து, கேரள மக்களை வியக்க வைத்துள்ளார்.  
துளசியின் தந்தை முத்துசாமி விவசாயி. தாயார் காளியம்மா காடுகளில் சுள்ளி பொறுக்குபவர். துளசி குடும்பத்துக்குஅட்டப்பாடியில் பத்து ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்துக்குப் பெரிய அளவில் பலன் தராத பூமி அது. கேரளத்தைப் பொறுத்தவரை, அட்டப்பாடி நம்ம ஊர் ராமநாதபுரம் மாதிரி. அதாவது பனிஷ்மென்ட் ஏரியா. இங்கு டாக்டராகப் பணியாற்ற யாருமே முன்வர மாட்டார்கள். வந்தாலும் விரைவிலேயே மாற்றல் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள். இங்கு பாம்புக் கடியால் இறப்போர் அதிகம். மருத்துவ வசதி கிடைக்காமல் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்கு ஒருவர் இறந்திருப்பார்கள்
இத்தகைய துயரங்களைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்த  துளசிக்கு, டாக்டராக வேண்டும் என்ற வெறி மனதுக்குள் ஊறிப்போனது. அட்டப்பாடி  `அகழி'யில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார்.  ப்ளஸ் டூ முடித்த பிறகு, எந்த கோச்சிங்கும் இல்லாமல் நேரடியாகவே எம்.பி.பி.எஸ் மற்றும் கால்நடை மருத்துவத்துக்கான நுழைவுத்தேர்வு எழுதினார். அந்தச் சமயத்தில் கேரளத்தில் 13 ஆயிரம் பேர் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதினர். துளசிக்கோ முதன்முறை தோல்வியே கிட்டியது. ஆனால், ஒரு பாடம் கிடைத்தது. அதாவது, கோச்சிங் எடுக்க வேண்டும் என்கிற விஷயம் துளசிக்குத் தெரியவந்தது
அடுத்த முறை நகரவாசிகள்போலத் திட்டமிட்டுப் படித்தார். அட்டப்பாடி பகுதியில் சற்று பெரிய நகரம் என்றால் சைலன்ட் வேலிக்குப் பக்கத்தில் உள்ள மன்னார்காடுதான். நல்லவேளையாக அங்கே ஒரு கோச்சிங் சென்டர் இருந்தது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இந்த முறை எழுதிய தேர்வில் எஸ்.டி பிரிவில் 17-வது ரேங்கில் வெற்றிபெற்றார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படிக்க இடம் கிடைத்ததுஅட்டப்பாடியோ ஊருக்குள் கார் சென்றால்கூட பின்னாலேயே ஓடும் சிறுவர்கள் நிறைந்த பகுதி. திருவனந்தபுரமோ... மிகப்பெரிய நகரம்.
ஆனாலும் நகர வாழ்க்கை துளசியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி எம்.பி.பி.எஸ் பட்டமும் பெற்றுவிட்டார். `டாக்டர் ஆன இருளர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண்' என்கிற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. துளசிக்கு இரு கனவுகள். ஒன்று, அறுவைசிகிச்சை நிபுணர் ஆவது. மற்றொன்று, சாகும் வரை அட்டப்பாடியிலேயே மருத்துவச் சேவை புரிவது. `இந்த இரண்டுமே என் கண்கள் ' எனக் கூறும் அவரின் கழுத்தில் இப்போது 'ஸ்டதெஸ்கோப்' தொங்கிக்கொண்டிருக்கிறது!...நமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

Monday, 3 July 2017

BSNLEU -வின் தோழமை வாழ்த்துக்கள் . . .


GST பற்றி ஆத்ரேயா அவர்களின் கருத்து:- . .

Image result for athraiyaஇப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி. யில் ஒரு வரிவிகிதம் என்பது கிடையாது பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன(0%, 5% 12% 18% 28%). இதில் மிக முக்கிய அம்சம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இன்றய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது அதனால் அது மிக கடினமான காரியமாகும். இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். அமெரிக்கா முன்னணி முதலாளித்துவ நாடு. ஆனால் அங்கு வரிவிதிப்பு உரிமைகள் பலவும் மாநிலங்களிடம் உள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் வரிவிகிதங்கள் வேறுபடுகின்றன. ஏன் இங்கு இப்படி மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றை வரி விதிப்பு முறை திணிக்கப்படுகிறது? இரண்டாம் அம்சம் என்னவெனில், வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்தின், சட்டமன்றங்களின் கையில் இருந்தது. இப்பொழுது ஜீ எஸ் டி கவுன்சில் கைக்கு போய்விட்டது. அதிலும் மத்திய அரசின் கை ஓங்கிவிட்டது. இது ஜனநாயகத்திற்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.
ஜிஎஸ்டி அமல்படுத்திய பின்னர் வரி குறையும் என்கிறார்கள் ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.ஜிஎஸ்டி சட்டம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், மது போன்ற பொருட்களை வெளியில் வைத்திருக்கிறது. இவற்றின் விற்பனை மூலம் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கும் வாட் மூலம் மாநில அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. (மதுவை ஜிஎஸ்டி கீழ் கொண்ட வர தனி சட்ட திருத்தம் தேவை.) ஜிஎஸ்டி வரி சுமையை குறைக்கும் என்பதில் உண்மை இல்லை.இந்த வரி விதிப்பானது நுகர்வோர்களை பாதிக்கப்பட கூடியதாக அமையும்.பணக்காரர்களிடம் இருந்து முறையாக நேர்முக வரிகளை வசூலிப்பதற்க்கு பதிலாக சாதாரண மக்களின் சுமைகளை கூட்டியிருக்கிறது. இது மட்டுமின்றி, சிறு குறு தொழில்முனைவோர், வணிகர்கள் அரசு நிர்வாக அமைப்பின் கடுமையான தொந்தரவுக்கும் ஊழல்சார் நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.
மத்திய அரசு ஒற்றை மொழி ,ஒற்றை மதம் கலாச்சாரத்தை திணிக்க முயல்வதைப் போன்றே ஒற்றை வரி என்று கொண்டு வந்திருக்கிறார்கள். 8 கோடி, 20 கோடி மக்கள் கொண்ட மாநிலங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நகராட்சி போல் நடத்துவது தவறு.
மத்திய அரசின் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் முறைசாரா தொழில்கள், சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராகவும் உள்ளன .உழைப்பாளர்கள் பணி நிலமைகளை முறைப்படுத்தி பயன்களை தொழிலாளிகளுக்கு தர அரசு தயாராக இல்லை.பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் உழைப்பாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை கொண்டுவந்துள்ளனர். இதேபோல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தோல்விகண்ட பிறகு, மாநில சட்டங்கள் மூலம் பாஜக மாநிலங்களில் அதேகாரியத்தை செய்துவருகின்றனர். செல்லாக்காசு நடவடிக்கையும், விலங்கு சந்தைகள் தொடர்பான விதிமுறைகள் அறிவிக்கையும் இதே வகையில் தான் அமைந்துள்ளன. கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கான நடவடிக்கையாகத் தான் ஜிஸ்டியையும் பார்க்க முடிகிறது”.

Sunday, 2 July 2017

அருமைத் தோழர். ஆர். சௌந்தர் 02-07-17 இயற்கை எய்தினார்...

Related image 1968ம் ஆண்டு தபால் தந்தி ஊழியர்களுடைய அகில இந்திய போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தினை சட்ட விரோதமெனக் கூறி தடை செய்த அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அத்துடன் நில்லாமல் அந்தப் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குவதற்கும் முற்பட்டது. அகில இந்திய அளவில் செயல்பட்ட சங்கத் தலைவர்கள் பலரும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டனர். வீரம் செறிந்த அந்தப் போராட்டத்தை மதுரையில்  முன்னின்று நடத்தியவர் தோழர். ஆர். சௌந்தரராஜன்.சக தோழர்களால் சீனியர்  “சௌந்தர்” என்று அன்போடு அழைக்கப்படும் சௌந்தரராஜனின், மறைவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
79 வயதாகும் தோழர்.ஆர். சௌந்தர் அண்மைக் காலமாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .  தோழர்களோடு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்த போது அவரால் கோர்வையாகப் பேச முடியவில்லை.
தொலைபேசித் துறையில் பணியில் இருந்த நாட்களிலும், பணி ஓய்வு பெற்ற பிறகும் தோழர்.ஆர். சௌந்தரராஜன்  தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்காக இயக்கத்திற்கு ஆற்றிய பணி  பாராட்டுக்குரியது. பின்பற்றத்தக்கது.
இறுதி நிகழ்ச்சி 3-7-17 மதியம் 1 மணிக்கு மேல் நடைபெறும்.
வீட்டு விலாசம் :
பிளாட் எண் :616 
கற்பக நகர் , 11 வது தெரு, 
மதுரை 7.

ஜி.எஸ்.டி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது – பிரபாத் பட்நாயக்.

Image result for - prabhat patnaikமத்திய அரசு தற்போது அமல்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தலை சிறந்த பொருளாதார அறிஞரான பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
ஜிஎஸ்டி அமல்படுத்த பட்ட பின்பு, எந்த மாநில அரசுகளும், எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என தீர்மானிக்க முடியாது.
இது அரசியல் அமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள அதிகாரம். இப்ப இந்த உரிமை முற்றாக மறுக்கப்பட்டு விட்டது.
அனைத்து வரி அதிகாரமும் நடுவண் அரசில் மையப்படுத்தப்பட்டு விட்டது.
எதாவது ஒரு மாநில அரசு உள்ளூர் தேவை அடிப்படையில் மாற்று வரி யோசனைகளை இனிமேல் சிந்திக்கவே முடியாது.
அப்படி யோசித்தால் கூட ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அங்கே நடுவண் அரசே ஆதிக்கம் செலுத்தும்.
ஆக,நடுவண் அரசை பரிபூரணமாக சார்ந்தே மாநில அரசுகள் வரி விசயத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இது இந்திய கூட்டாட்சி கோட்பாட்டை குழிதோண்டி புதைப்பதாகும்.
எனவே ஜிஎஸ்டி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.
இது உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி விகிதத்தில் 2 சதவீத வளர்ச்சியை அதிகரிக்கும் என கூறி , எந்த வித அர்த்தமும் இல்லாத ஒரு பொருளாதார மோசடியை அரங்கேற்றியிருக்கின்றனர்..
ஜி.எஸ்.டி என்பது நாட்டில் உள்ள கார்பரேட்டுகளின் விருப்பம் ஆகும். அதையே மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. குறுகிய காலத்தில் உங்களின் நிதிநிலை சீர்குலைவை சந்திக்காது எனக்கூறியே மாநில அரசுகளின் ஒப்புதலை மோடி அரசு பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Saturday, 1 July 2017

ஜூலை-1, தேசிய மருத்துவர் தினம்...

Image result for இந்திய மருத்துவர்கள் தினம்

01-07-2017 முதல் IDA 1.9% சதவீதம் உயர்ந்துள்ளது. . .

01-07-2017 முதல் IDA 1.9% சதவீதம் உயர்வு...!

01-07-2017 முதல் IDA 1.9% சதவீதம் உயர்ந்துள்ளது.
இத்துடன்..., மொத்த..., IDA..., (117.1% + 1.9%)
119% சதவீதம் ஆகும்.