01.01.2017 முதல் BSNLல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்தக் கோரியும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திடவும் BSNLல் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் சார்பாக 16.10.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருப்பதால் ஒரு சில சிரமங்கள் இருந்தாலும், பிரச்சனைகளின் தன்மையை கணக்கில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை சக்தி மிக்கதாக நடத்திட வேண்டும். இந்த போராட்ட அறிவிப்பில் கையெழுத்திடாத சங்கங்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் இந்த போராட்டத்தில் இணைய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது. எனவே தலமட்டங்களில் உள்ள அனைத்து ஊழியர்களையும் இணைத்து இந்த போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்யுமாறு தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment