bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 10 April 2018

AUAB மதுரையில் ஆர்ப்பாட்டம்

Image may contain: 5 people, people standingImage may contain: 3 people, including Barathan Subramaniyan, people standing

Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing



தமிழ்நாடு AUAB அறைகூவளுக்கிணங்க மதுரையில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் தோழர் ஜி.ராஜேந்திரன் NFTE தலைமையில் நடைபெற்றது ,தோழர்கள் C.செல்வின் சத்யராஜ் BSNLEU,சந்திரசேகர் SNEA,A.அருணாசலம் AIBSNLEA, கண்டன உரை நிகழ்த்தினார்கள் .தோழர் முத்துக்குமார் FNTO,தோழர் ராதாக்ருஷ்ணன் TEPU,தோழர்  அழகுமலை சேவா BSNL ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .




அகர்தலா மத்திய செயற்குழு முடிவுகள்




நமது சங்கத்தின் மத்திய செயற்குழு 03.04.2018 முதல் 05.04.2018 வரை அகர்தலாவில் சிறப்பாக நடைபெற்றது. ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆழமான விவாதங்கள் நடைபெற்றது. 

ஊழியர் கோரிக்கைகளில் BSNL நிர்வாகத்தின் இன்றைய மெத்தன போக்கு, தேங்கியுள்ள ஊழியர் தரப்பு கோரிக்கைகள், BSNLல் செய்யப்படும் தேவையற்ற  செலவினங்கள், ஊழியர் பற்றாக்குறை, Outsourcing, பொதுவான பிரச்சனைகள் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 03.05.2018 அன்று கோரிக்கை தினம் அனுஷ்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்று நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ்  அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.  

"கோரிக்கை தின" கோரிக்கைகள்:

01. BSNL பணிகளை அவசர கதியில் Outsourcing முறையில், தனியாருக்கு தாரைவார்க்காதே!

02. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்து!

03. மருத்துவ சலுகைகளை பறிக்காதே!

04. ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாதே!

05. Sr.TOA கேடரில் புதிய பணி நியமனம் செய்!

மத்திய செயற்குழு முடிவுகளை கறாராக அமுல்படுத்துவோம்....

ஊழியர் நல கோரிக்கைகளை வென்றெடுப்போம்!

தோழமையுடன்,
C.செல்வின் சத்யராஜ் 
மாவட்டசெயலர்